உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஆவணங்களை யாரிடமும் ஒப்படைக்க முடியாது : பொன்மாணிக்கவேல் அதிரடி

Scroll Down To Discover
Spread the love

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நியமிக்கப்பட்டிருந்தார்.உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற இந்த நியமனத்தின் அடிப்படையிலான பொன் மாணிக்கவேலின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது.இதனை சுட்டிக்காட்டி,  சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக பொன் மாணிக்கவேலிடம் இருக்கும் கோப்புகள், விவரங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங்கிடம் இன்றைக்குள் ஒப்படைக்கும் படி அரசாணை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுபற்றி பொன்.மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்:- இந்நிலையில் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து தமிழக அரசு விடுவிக்க முடியாது என்று பொன்மாணிக்கவேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் தான் தம்மை நியமித்ததாக தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு பொன்.மாணிக்கவேல் கடிதம் அனுப்பியுள்ளார். பொன். மாணிக்கவேல் எழுதியுள்ள கடிதத்தில், சிலை கடத்தலை விசாரிக்க உயர்நீதிமன்றம் என்னை சிறப்பு அதிகாரியாக நியமித்தது, உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது என்றும் ஆகவே உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஆவணங்களை யாரிடமும் ஒப்படைக்க எனக்கு அனுமதியில்லை என்றும் பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.