சிவகாசி சிவன் கோவில் வைகாசி பிரமோற்சவ தேரோட்டம்…! பக்தர்கள் உற்சாகமாக வடம் பிடித்து தேர் இழுத்தனர்..!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரசித்திபெற்ற ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி – ஸ்ரீவிசாலாட்சி அம்மன் எழுந்தருளும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வாரம் திங்கள் கிழமையன்று, வைகாசி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி – அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷபம், காமதேனு, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.

வைகாசி பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. கோயில் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தேரில் ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி – ஸ்ரீவிசாலாட்சி அம்மையுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் நான்கு ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரிழுத்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.