பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது மதுரை வழக்கறிஞர் போலீஸ் கமிசனரிடம் புகார்..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை ஜூன் 6 : மதுரை எஸ். எஸ். காலனி வடக்கு வாசலை சேர்ந்தவர் வக்கீல் சுமேஷ் .இவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் .இவர் மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சோசியல் மீடியாவில் நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்து ஆதாரமற்ற வகையில் பேசியுள்ளார். இவர் பேச்சை கேட்ட குமார் என்ற தொழிலதிபர் தமிழகத்தில் தொழில் தொடங்க திட்டமிட்டு இந்த நிலையில் தனது முடிவை மாற்றி தெலுங்கானாவில் தொழில் செய்ய மனம் மாற்றிக்கொண்டார்.

இவரது பேச்சு தமிழகத்தின் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவரது ஆதாரமற்ற பதிவை நீக்கி அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.

செய்தி : Madurai -Ravichandran