மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரை புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிரசாத் சர்மா தலைமையில் விசுவநாத சர்மா, அப்பி கிருஷ்ணன், சங்கர்ராமன், சதீஷ்சர்மா, நாராயணன் உள்ளிட்ட குழுவினர் நேற்று காலை கணபதி பூஜையுடன் முதலாம் கால யாக பூஜை நிகழ்ச்சிகளை தொடங்கினார்கள் . எந்திர பிரதிஷ்டை, கோபுர கலசம் ஸ்தாபனம் நடைபெற்றது. தொடர்ந்து, இன்று காலை இரண்டாம் கால யாகபூஜை கோ பூஜையுடன் தொடங்கியது.
காலை 9 மணிக்கு மேல் கடம் புறப்பாடாகி கோவிலைச் சுற்றி வலம் வந்து கும்பத்தின் மேல் புனிதநீர் தெளிக்கப்பட்ட கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு, பால், தயிர் வெண்ணெய், நெய் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, தென்கரை புதூர் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
செய்தி : Madurai -Ravichandran

														
														
														
Leave your comments here...