ஐபிஎல் போட்டியில் நோ பால் தவறுகளைக் கண்டுபிடிக்கத் தனி நடுவர் நியமிக்கப்படவுள்ளார்- பிசிசிஐ அமைப்பின் செயலாளர் தகவல்.!

Scroll Down To Discover
Spread the love

ஐபிஎல் போட்டியில் நோ பால் தொடர்பாகச் சில சர்ச்சைகள் ஏற்பட்டன. இதையடுத்து அதுபோன்ற சூழல்கள் மேலும் ஏற்படாதவாறு இருக்க பிசிசிஐ சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ அமைப்பின் செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ் கூறியதாவது:- 

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோ பால் தவறுகளைக் கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் போட்டி எப்போதும் புதுமைக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் விளையாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தொழில்நுட்பங்களால் தவறுகளைக் களையும்போது வீரர்களும் அதனால் பலன் அடைவார்கள்.

நோ பால் தவறுகளைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுதொடர்பான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இப்பரிசோதனை முயற்சி தொடரும். இதன் தகவல்களைப் பெற்றுக்கொண்டு இதை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என அடுத்ததாக யோசிப்போம். எல்லாம் நல்லபடியாக நடந்தால், அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் வழக்கமான நடுவர்களைத் தாண்டி இன்னொரு நடுவர், நோ பால் தவறுகளைக் கவனிப்பதற்கென்றே தனியாக இருப்பார். ஐபிஎல் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.