ரூ.3,000 கோடி மதிப்பில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத் துறை ஒப்பந்தம்..!

Scroll Down To Discover
Spread the love

இந்திய ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஒ) மூலம் உருவாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிப்பது அதிநவீன அஸ்திரா ஏவுகணை.

இந்நிலையில், இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு ரூ. 2,971 கோடி செலவில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானப்படை மற்றும் கடற்படை ரூ.2,971 கோடி மதிப்பீட்டில் அஸ்திரா ஏவுகணை வாங்க பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்