பாதுகாப்பு கருதி பாஜக ஏற்பாடு செய்த பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை..!

Scroll Down To Discover
Spread the love

சென்னை பட்டினப்பாக்கத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருகை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் பலூன்களை பறக்க விடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்நிகழ்வில் கலந்து கொண்டு பலன்களை பறக்கவிட இருந்தார். பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனால் நிகழ்வில் பங்கேற்க இருந்த அண்ணாமலை பங்கேற்கவில்லை.

இதனைத் தொடர்ந்து பாஜக மாநில நிர்வாகிகள் பலூன்களை கையில் ஏந்தி பிரதமர் தமிழகம் வருவதை முன்னிட்டு வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன், தமிழகத்தில் கூலிப்படையினர் அதிகரித்து வருவதால் கோ பேக்மோடி என்கிற ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்வதும் கூலிப்படையே என்று குற்றம்சாட்டினார்

பிரதமர் மோடியின் வருகையை தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர் துபாய்க்கு குடும்ப சுற்றுலா செல்வதற்காக தமிழகம் வரவில்லை. மாறாக 36,000 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். கடந்த காலங்களிலும் கோபேக்மொடி என்கிற ஹேஷ்டேக் பாகிஸ்தானில் இருந்து ட்ரெண்ட் செய்யப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று என்று தெரிவித்தார்.

சென்னை வரும் பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்
மேலும் ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் உள்ள அறையை பூட்டி சாவி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பலூன்களை பறக்க விடப் போவது இல்லை. கையில் வைத்துக்கொண்டு வரவேற்க உள்ளோம் என்று காவல்துறையிடம் தெரிவித்தனர்.