கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் – பாஜக சார்பாக நடந்த பயங்கரவாத எதிர்ப்பு போராட்டம்..!

Scroll Down To Discover
Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்த தவறிய தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் தலைமையில் இரணியல் அடுத்த திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோவில் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் பாஜக மூத்த தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக எம்எல்ஏ. எம்.ஆர் .காந்தி, மாநில செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி வார்டு உறுப்பினருமான மீனா தேவ், மாவட்ட பாஜக பொருளாளர் முத்துராமன், மாவட்ட பாஜக துணைத் தலைவர் குமரி ப.ரமேஷ், Nk.பாபு, மேலும் இந்து முன்னனி தலைவர்கள் என பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்தும் குமரி மாவட்ட காவல்துறையை கண்டித்தும் பல முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் பேசுகையில்:- திமுக அரசை விடியாத அரசு எனவும் ஹிந்துக்களுக்கு எதிரான அரசு எனவும் கடுமையாக குற்றம்சாட்டினர்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசுகையில்:- குமரி மாவட்ட காவல்துறை தொடர்ந்து ஒருதலைபட்சமாக மீண்டும் மீண்டும் செயல்பட்டால் விரைவில் குமரி மாவட்டத்தில் மதக்கலவரம் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

இந்த போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.