உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட’சூரத்’, ‘உதயகிரி’ போர் கப்பல்கள் – அறிமுகம் செய்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர்..!

Scroll Down To Discover
Spread the love

இந்திய கடற்படை இரண்டு முன்னணி போர்க்கப்பல்களான சூரத், உதய்கிரி ஆகியவற்றை மும்பையில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இதில் சூரத் போர்க்கப்பல், ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கவல்லது. உதய்கிரி, ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்டதாகும்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் கடல்சார் திறனை அதிகரிக்கும் அசைக்க முடியாத அரசின் உறுதிப்பாட்டுக்கு இந்தப் போர்க்கப்பல்கள் வலு சேர்ப்பதாகத் தெரிவித்தார். தற்சார்பு இந்தியா என்பதற்கு இணங்க கப்பல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கப்பல்களைக் கட்டிய மசாகான் தளத்தைப் பாராட்டினார்.


இந்தியாவின் தற்சார்பு கொள்கைக்கு இணங்க தயாரிக்கப்பட்ட இரு போர்க்கப்பல்களும் இந்திய கடற்படையின் வலிமைக்கு மேலும் வலுசேர்ப்பவை என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார். இந்தியாவின் வளர்ந்து வரும் உள்நாட்டுத் திறனுக்கு உதாரணமாக இந்த கப்பல்கள் திகழ்கின்றன என்று கூறிய அவர், இக்கப்பல்கள் மிக அதி நவீன ஏவுகணைகளை தாக்கிச் செல்லும் திறன் கொண்டவை என்றும், எதிர்கால தேவைகளையும் இவை பூர்த்தி செய்யும் என்றும் தெரிவித்தார்.