தெலுங்கானாவில் கால்நடை மருத்துவர் எரித்து கொலை : முக்கிய குற்றவாளிகள் கைது..!

Scroll Down To Discover
Spread the love

ஹைதராபாத்தில் விலங்குகள் நல மருத்துவரான பிரியங்கா ரெட்டி காணாமல் போனதாகப் பெற்றோர் போலீஸில் புகார் அளித்த நிலையில் அவரது உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் குடும்பத்தினர் பேரதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கால்நடை மருத்துவர் பிரியங்காரெட்டி

பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் 15 தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்ட DCP பிரகாஷ் ரெட்டி, 4 பேரை கைது செய்தனர். இதில் ஒரு லாரி டிரைவர் ஒரு கிளீனர் மற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியாக நாராயன்பேட் சேர்த்த முஹம்மது பாஸா பிடிபட்டார். அவருடன் ஜோலு நவீன், சென்னகேசவலு. ஜோலு சிவா ஆகியோர் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இரவு 9.40 அளவில் குடிபோதையில் ப்ரியங்காவின் இருசக்கர வாகனத்தை பஞ்சர் செய்து அவருக்கு உதவிசெய்வதாக கூறி பிரியங்காவை பலவந்தமாக தூக்கி சென்று அருகில் இருந்த காலி இடத்தில் கூட்டாக கற்பழித்து ப்ரியங்காவையும் அவருடைய இருசக்கர வாகனத்தையும் லாரியில் ஏற்றி சென்று 40 கி.மி கொண்டு சென்று ஷஹாதத் நகரில் உள்ள சத்தன்பள்ளி பாலம் அருகில் பிரியங்காவை போர்வையில் சுற்றி மண்எண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இதயம் நொருங்கி விட்டது, மருத்துவர் பிரியங்கா ரெட்டி பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மனதை உலுக்குகிறது என தனது பதிவில் கூறியுள்ளார்.இதற்கு கண்டனம் தெரிவித்து #RIPPriyankaReddy #JusticeForPriyankaReddyஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.