சிவகங்கை நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட்..!

Scroll Down To Discover
Spread the love

சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன். நேற்று (மே 13) இரவு 8:30 மணிக்கு நகராட்சிகளின் நிர்வாக கமிஷனர் பொன்னையா தலைமையில் அனைத்து நகராட்சி கமிஷனர்களுக்கும் வீடியோ கான்பிரன்சிங் முறையில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அப்போது சிவகங்கை நகராட்சி வளர்ச்சி பணிகள், டெண்டர் விட்டதில் உள்ள பிரச்னைகள் குறித்து பொன்னையா, சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியனை, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பொன்னையா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். நேற்று இரவு இன்ஜினியர் பாண்டீஸ்வரி, கமிஷனராக கூடுதல் பொறுப்பை ஏற்றார்.