நாடு முழுவதும் 2,000 ரயில் நிலையங்களில் டிஜிட்டல் திரைகள் – இந்திய ரயில்வே நிர்வாகம்.!

Scroll Down To Discover
Spread the love

நாடு முழுவதும் உள்ள 2,000 ரயில் நிலையங்களில் டிஜிட்டல் திரைகளை அமைக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இரண்டாயிரம் ரயில் நிலையங்களில் 65,000 டிஜிட்டல் திரைகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரயில்களின் நேரம் உள்ளிட்ட ரயில் சேவை விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த டிஜிட்டல் திரைகள் ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம், நடைமேடைகள் மற்றும் காத்திருக்கும் அறைகள் போன்ற இடங்களில் நிறுவப்பட உள்ளன.