ஹஜ் காமிட்டி துணைத் தலைவராக பெண்கள் நியமனம்..!

Scroll Down To Discover
Spread the love

ஹஜ் கமிட்டியின் புதிய தலைவராக ஏ.பி.அப்துல்லா குட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான இவர், பாஜகவின் தேசிய துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் முதல் முறையாக ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக முன்னாவாரி பேகம் மற்றும் மபூஜா கதுன் ஆகிய இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் முன்னாவாரி பேகம், மத்திய வக்பு வாரிய உறுப்பினராகவும், மபூஜா கதுன் மேற்கு வங்க மாநில பா.ஜ.க துணைத் தலைவராகவும் இருக்கின்றனர். ஹஜ் கமிட்டியின் புதிய நிர்வாகிகளுக்கு, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி வாழ்த்து தெரிவித்துள்ளார்.