பொருளாதார நெருக்கடி : இலங்கையில் பெட்ரோல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.338க்கு விற்பனை..!

Scroll Down To Discover
Spread the love

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு உள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தீவு முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84 அதிகரித்துள்ளது. அதன்படி இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.338க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் டீசல் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.113 அதிகரித்து ரூ.289க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அன்றாட வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்தித்துவரும் இலங்கை மக்களுக்கு பெட்ரோல், டீசலின் விலை உயர்வு மேலும் வேதனையை கொடுத்துள்ளது.