நடிகர் மாதவனின் மகன் தங்கப்பதக்கம் வென்று சாதனை..!

Scroll Down To Discover
Spread the love

நடிகர் மாதவன் மகன் வேதாந்த் நீச்சல் வீரர். பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார். சமீபத்தில் டென்மார்க் தலைநகர் கோபன்ேஹகனில் நடந்த டேனிஷ் சர்வதேச நீச்சல் போட்டியில் கலந்து கொண்டார்.

இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஒலிம்பிக் நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ், 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். மாதவன் மகன் வேதாந்த், 1500 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதை இந்திய நீச்சல் பெடரேஷன் அறிவித்துள்ளது.

இதையடுத்து சஜன் பிரகாஷ், வேதாந்த் ஆகியோருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்ககேற்க வேதாந்த் தயாராகி வருகிறார். எனவே, மகனின் நீச்சல் பயிற்சியையொட்டி மாதவன் தனது குடும்பத்தினருடன் துபாயில் குடியேறியுள்ளார்