25வருடங்களுக்கு முன்னாள் கடத்தப்பட்ட துவார பாலகர் சிலைகள் மீட்பு: ஆஸ்திரேலிய பிரதமர் ஜனவரியில் ஒப்படைக்கிறார் பிரதமர் மோடியிடம்..!

Scroll Down To Discover
Spread the love

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூரில் மிகவும் பழமை வாய்ந்த மூன்றீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 1995ம் ஆண்டு துவாரபாலகர் சிலைகள் இரண்டு மாயமானது. இதுகுறித்து வீரவநல்லூர் காவல் நிலையத்தில் அப்போது புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. பின்னர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். அவர், சிலை கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள அமெரிக்காவை சேர்ந்த பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.  அப்போது, சுபாஷ் சந்திர கபூர், தனது கூட்டாளியான சஞ்சிவ் அசோகன், வல்லப பிரகாஷ் உள்ளிட்ட 8 பேருடன் ேசர்ந்து தமிழகம் முழுவதும் பழமை வாய்ந்த கோயில்களை கண்காணித்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஐம்பொன் மற்றும் கற்சிலைகளை கடத்தி ஆஸ்திரேலியா, ஹாங்காங், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், மூன்றீஸ்வரர் கோயிலில் திருடப்பட்ட துவாரபாலகர் சிலைகளை மும்பை வழியாக கப்பல் மூலம் ஹாங்காங் கொண்டு சென்று அங்கிருந்து சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெரா அருங்காட்சியகத்திற்கு ரூ.4.98 கோடிக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து ஐஜி பொன்.மாணிக்கவேல் சிலையை மீட்க ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகர் மூலம் சிலைகளுக்கான உரிய ஆவணங்களுடன் கடிதம் எழுதினார். அதன்படி அந்நாட்டு அருங்காட்சியகம் இரண்டு சிலைகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டனர். வரும் ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வர உள்ளார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட துவாரபாலகர் சிலைகள் ஒப்படைக்கப்படுகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரண்டு சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் தமிழகத்திற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றனர்.

இது குறித்து பொன் மாணிக்கவேல் கூறியதாவது:- மீட்கப்பட்டுள்ள இரு சிலைகளும் அத்தாளநல்லாரில் உள்ள கோவிலில் இருந்து தான் திருடப்பட்டது என்பதை கண்டறிவது மிகவும் சிரமாக இருந்தது. சிலைகள் திருட்டு பற்றி திருநெல்வேலி மாவட்ட போலீசார் வழக்குப் பதிந்து இருந்தால் எளிதாக அடையாளம் கண்டு சிலைகளை முன்பே மீட்டு இருக்கலாம். இந்த சிலை மீட்பு முயற்சியில் என்னுடன் கூடுதல் எஸ்.பி. மலைச்சாமி மிகவும் உறுதுணையாக இருந்தார். மீதமுள்ள சிலைகளையும் விரைவில் மீட்போம் என கூறினார் கூறினார்.