புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டணம் யூனிட்டுக்கு 35 பைசா உயர்வு : இன்று முதல் அமல்..!

Scroll Down To Discover
Spread the love

புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, யூனிட்டுக்கு 35 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆண்டுதோறும் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. 2022–2023-ம் ஆண்டுக்கான உத்தேச மின் கட்டணம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காணொலியில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதன்பின் உத்தேச கட்டணமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறிவிக்கப்பட்டு இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி புதுச்சேரியில் இன்று முதல் வீட்டு உபயோக மின்கட்டணம் உயர்ந்துள்ளது.

100 யூனிட்டுக்குள் ஒரு யூனிட்டுக்கு ரூ.1.55 ஆக இருந்த கட்டணம் 35 பைசா உயர்ந்து ரூ.1.90 ஆகவும், 101ல் இருந்து 200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.2.60 ஆக இருந்த கட்டணம் 15 பைசா உயர்ந்து ரூ.2.75 ஆகவும் உயர்ந்துள்ளது. 201 யூனிட்டுக்கு மேல் வீட்டு உபயோக கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. வர்த்தகம், விவசாய மின் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிட தக்கது.