இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் தருகிறது ரஷ்யா..!

Scroll Down To Discover
Spread the love

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், அந்நாடு இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன் வந்துள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் இரண்டு நாள் பயணமாக டில்லி வந்து, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின் போது, தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் தருவதாக ரஷ்யா உறுதி அளித்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் போர் தொடுப்பதற்கு முன் நிலவிய விலையிலேயே கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளது.

இந்தாண்டு, 1.50 கோடி பேரல் கச்சா எண்ணெய் வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்ய ரஷ்யா ஆர்வமாக உள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை ரஷ்யாவின் ரூபிள் கரன்சிக்கு நிகரான ரூபாய் மதிப்பில் பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.