அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கோவையில் இருந்து தங்க செங்கல் அனுப்பிய ஜான் பாண்டியன்.!

Scroll Down To Discover
Spread the love

அயோத்தியில் ராம ஜென்ம பூமி என்று சொல்லப்படும் சுமார் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு நீண்ட நெடிய நாட்களாக உச்சநீதிமன்றத்தில் இருந்து வந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து பேர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, சுமார் 40 நாட்களுக்கும் மேலாக வழக்கை விசாரித்தனர்.அதில் 2010-இல் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என்று அறிவித்த நீதிமன்றம், தொல்லியல் துறையின் ஆதாரங்களை மேற்கோள் காட்டியதுடன் , அயோத்தி இடம் அரசுக்கு சொந்தமானது என அறிவித்து. இந்துக்கள் இங்கு ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கியது. மேலும் சர்ச்சைக்குரிய அயோத்தி இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்ததுடன் இஸ்லாமியர்களுக்கு அதே அயோத்தியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் மாற்று இடம் வழங்கவும் உத்திரபிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டது . இதனையடுத்து அயோத்தியில் கோயில் கட்ட மூன்று மாதங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தற்போது கோவில் கட்ட நாடு முழுவதும் இருந்து பல்வேறு இந்து அமைப்புகள் செங்கல் அனுப்பி வருகிறது. இந்நிலையில் பாரத சனாதன தர்மசேவா அறக்கட்டளை சார்பாக கோவை ராம்நகர் பகுதியில் அயோத்தியில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு கோவில் கட்ட தங்க செங்கல் அனுப்பும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முன்னேற்றக்கழக தலைவர் ஜான்.பாண்டியன், சக்திசேனா இந்து மக்கள் இயக்க தலைவர் அன்புமாரி, மற்றும் பா.ஜ.க வழக்கறிஞர் திருமதி தனலட்சுமி, மாவட்ட பொதுச்செயலாளர் புல்லட் சேகர், மாவட்ட தலைவர் காளிதாஸ்,  மாவட்ட துணைத்தலைவர் பொட்டு ரமேஷ், மாவட்ட செயலாளர் சரவணன், லோகு, மற்றும் பலர் கலந்து கொண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தங்க செங்கலை வழி அனுப்பி வைத்தனர்..