கடலில் நீந்தி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி சிறுமி – பாராட்டிய டிஜிபி சைலேந்திரபாபு..!

Scroll Down To Discover
Spread the love

இலங்கை தலைமன்னாரில் இருந்து அரிச்சல்முனை வரை 13 மணி நேரம் கடலில் நீந்தி வந்து மாற்றுத்திறனாளி சிறுமி சாதனை படைத்தார்.

இந்தியா – இலங்கை நட்புறவை மேம்படுத்தும் நோக்கத்தோடு மும்பையைச் சேர்ந்த மதன் ராய் என்பவரின் மகள் ஜியா ராய் என்ற 13 வயது சிறுமி, இலங்கை தலைமன்னாரில் இருந்து 28.5 கிலோ மீட்டர் தொலைவை 13 மணி நேரத்தில் கடலில் நீந்தியபடி தனுஷ்கோடியை அடுத்துள்ள அரிசல்முனை பகுதியை வந்தடைந்தார்.

இதுவரை இலங்கை தலைமன்னாரில் இருந்து அரிச்சல்முனை வரை மாற்றுத்திறனாளி யாருமே நீந்தி வராத நிலையில், முதல் முதலாக காதுகேளாத வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளியான ஜியா ராய் 13 மணி நேரம் கடலில் நீந்தி வந்து சாதனை படைத்துள்ளார்.இதையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நினைவு பரிசுடன் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி பாராடினார்.