பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு ரூ.7,500 கோடி: இந்தியா கடனுதவி..!

Scroll Down To Discover
Spread the love

கடும் பொருளாதார நெருக்கடி, அன்னியச் செலாவணி பற்றாக்குறை போன்றவற்றால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று, 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்க இந்தியாஒப்புதல் அளித்தது.

இதில் ஏற்கனவே, ரூ .7,000 கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷே, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

அப்போது இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் உதவிக்கு அவர் நன்றி கூறினார். அதற்கு ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

இது குறித்து மத்திய நிதியமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இருவருடனும் பசில் ராஜபக் ஷே பேச்சு நடத்தினார். அப்போது இந்தியா – இலங்கை இடையிலான பரஸ்பர நல்லுறவு குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்க, இலங்கை அரசுக்கு, 7,500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.