துப்பாக்கிச்சூடு – 4 சக வீரர்களை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பிஎஸ்எப் வீரர்..!

Scroll Down To Discover
Spread the love

பஞ்சாபில் 4 சக வீரர்களை சுட்டுக் கொன்ற எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிஎஸ்எப் முகாம் அமைந்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள அட்டாரி – வாகா எல்லையில் இருந்து சுமார் 13 கி.மீ., தொலைவில் காசா பகுதியில் பிஎஸ்எப் பின் 144வது பட்டாலியன் முகாம் அமைந்துள்ளது. இன்று (மார்ச் 6) 9:30 மணியில் இருந்து 9:45 மணிக்குள் சட்டீபா எஸ்கே என்ற வீரர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதில் சக வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றொரு வீரர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. சட்டிபாவும் குண்டடிபட்டு உயிரிழந்து கிடந்தார்.

அவர் தன்னை தானே சுட்டு கொண்டாரா அல்லது வீரர்கள் பதிலடியில் அவர் உயிரிழந்தாரா என விசாரணை நடந்து வருகிறது. மன உளைச்சல் காரணமாக அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எதற்காக அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிஎஸ்எப் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

பணி அழுத்தத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா அல்லது பிஎஸ்எப் வீரர்களுக்கு ஏற்பட்ட தகராறால் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததா ஆகிய கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.