விருதுநகர் – மானாமதுரை இடையே உள்ள 61 கிலோமீட்டர் தூரம் மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது மின்மயமாக்கல் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையாளர் அபய்குமார்ராய் தலைமையில், வரும் 7ம் தேதி (திங்கள் கிழமை) விருதுநகர் – மானாமதுரை ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. திங்கள் கிழமை மாலை சோதனை ரயில் ஓட்டம் நடைபெறுவதால், அந்தப்பகுதியில் ரயில் பாதைகளை கடந்து செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கவனமாக செல்லுமாறு ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்
உள்ளூர் செய்திகள்தமிழகம்
March 5, 2022

Leave your comments here...