சூதாட்டத்தில் அடிமை : பள்ளி நிதியில் இருந்து ரூ.5 கோடியை சுருட்டிய கன்னியாஸ்திரிக்கு சிறை..!

Scroll Down To Discover
Spread the love

அமெரிக்காவை சேர்ந்த கன்னியாஸ்திரி மேரி மார்கரெட் க்ரூப்பர் (80). இவர், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள ரோமன் கத்தோலிக் தொடக்கப் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தார்.சுமார் அறுபது ஆண்டு காலமாக தனது ஆசிரியர் பணியை மேற்கொண்டு வந்த க்ரூப்பர் சூதாட்டத்தில் அடிமையாகியதாக தெரிகிறது. சூதாட்டம் விளையாட அதிகளவில் பணம் தேவைப்பட்டதால், பள்ளி நிதியில் கைவைக்க க்ரூப்பர் முடிவு செய்துள்ளார்.

அதன்படி, பள்ளிக்கு செலுத்தப்படும் கல்விக் கட்டணம், நன்கொடைகள் உள்ளிட்டவையை க்ரூப்பர் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ரகசிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வந்துள்ளார். இதுபோன்று, சுமார் 5.97 கோடி ரூபாயை சுருட்டி சூதாட்டத்திற்கும், ஆடம்பரமான சுற்றுலாப் பயணங்களுக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டதால் சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து முன்னதாக தெரிந்துக்கொண்ட க்ரூப்பர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அழித்துவிடுமாறும் ஊழியர்களிடம் கூறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட க்ரூப்பர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நீதிமன்ற விசரணையின் இறுதி முடிவில் க்ரூப்பருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.