ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி சைலேந்திர பாபு..!

Scroll Down To Discover
Spread the love

ஆட்டோவில் ஏறும் பயணிகளுக்கு வைஃபை வசதி, செய்தித்தாள் என பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ள ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை, 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். தனது ஆட்டோவில் வை-ஃபை, செய்தித்தாள்கள், வார இதழ்கள், சிறிய குளிர்சாதனப்பெட்டி, குழந்தைகளுக்கு சாக்லேட், ஸ்நாக்ஸ் என பல வசதிகளை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார். மேலும், வாடிக்கையாளர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெறுகிறார்.

இதனை அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, அண்ணாதுரையை நேரடியாக ஆட்டோவுடன் டிஜிபி அலுவலகத்திற்கு வரவழைத்தார். அவரது ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து அதில் உள்ள வசதிகளை பார்த்து வியந்த டிஜிபி சைலேந்திரபாபு, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையை பாராட்டினார்.