கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1.38 லட்சம் கோடி ‘ஜிஎஸ்டி’ வசூல்..!

Scroll Down To Discover
Spread the love

கடந்த ஜனவரி மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை ஒன்றிய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில், ‘கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 394 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது.

இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.24,674 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.32,016 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.72,030 கோடியாகவும் உள்ளது. செஸ் வரி ரூ.9,674 கோடி வசூலாகியுள்ளது’ என கூறப்பட்டுள்ளது. கடந்த 2017 ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு, அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.1.39 லட்சம் கோடி வசூலானது.

அதன்பின் தற்போது 2வது அதிகபட்சமாக 1.38 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. முந்தைய ஆண்டு ஜனவரி மாதத்தை விட கடந்த மாத ஜிஎஸ்டி வசூல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் 1.29 லட்சம் கோடி வசூலானது. மேலும், 4வது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.30 லட்சம் கோடியை தாண்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.