அகஸ்தியர்-மணிமுத்தாறு அருவிகளுக்கு 2ந்தேதி முதல் அனுமதி..!

Scroll Down To Discover
Spread the love

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஆர்ப்பரித்து கொட்டும் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள், சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகியவை உள்ளன. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி மற்றும் வருகிற 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை விடுமுறை தினம் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் மற்றும் வருகிற கடந்த 27-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுவதாலும் மொத்தம் 12 நாட்கள் இந்த பகுதிகளுக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வருகிற 6-ந்தேதி வரை விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை வருகிற 1-ந்தேதி வரை மட்டும் குறைத்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.