பாரத் பயோடெக்கின் மூக்கு வழியாக பூஸ்டர் டோஸ் -பரிசோதனைக்கு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி..!

Scroll Down To Discover
Spread the love

பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மூக்கு துவாரம் வழியாக பூஸ்டர் தடுப்பு மருந்தை செலுத்தும் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு இந்திய பொது மருந்துக் கட்டுப்பாட்டாளர் அனுமதி தந்துள்ளார்.

கோவிட் வைரஸ் உருமாறி தடுப்பூசியின் செயல்திறனை குறைப்பதால் பூஸ்டர் டோஸ் மூலம் நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கின்றனர். இந்தியாவில் பூஸ்டர் டோஸ் ஜனவரி 10 முதல் வழங்கப்படுகிறது. நோய் பாதிப்புக்கு அதிக ஆபத்துள்ள நபர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒமைக்ரான் போன்ற புதிய உருமாறிய வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்பு ஆபத்து ஏற்படாது.

இந்நிலையில் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், மூக்கு வழி செலுத்தும் கோவிட் தடுப்பு மருந்துக்கான பரிசோதனைக்கு கடந்த மாதம் அனுமதி கோரியிருந்தது. நாட்டில் 9 இடங்களில் பரிசோதனை நடத்துவதற்கான அனுமதியை மருந்து கட்டுப்பாட்டாளர் வழங்கியுள்ளார்.

பிபிவி154 என்ற இந்த தடுப்பு மருந்தை தொற்று ஏற்படும் இடமான மூக்கில் செலுத்துவதன் மூலம், தொற்றை தடுப்பதில், பரவாமல் இருக்கவும் சிறப்பாக செயல்புரியும் என்கின்றது பாரத் பயோடெக். மேலும், மூக்கு வழி மருந்து என்பதால் இதனை செலுத்த பயிற்சி பெற்ற செவிலியர்கள் தடுப்பூசி முகாம்களில் இருக்க வேண்டிய அவசியமிருக்காது என்கின்றனர்.