மக்கள் அதிகம் வாங்கும் விலை உயர்ந்த மருந்துகள் விலை குறைக்க மத்திய அரசு திட்டம்..!

Scroll Down To Discover
Spread the love

நீரிழிவு நோய் மற்றும் பாக்டீரியா தொற்று சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகள் உட்பட மக்கள் அதிகம் வாங்கும் விலை உயர்ந்த மருந்துகளின் விலையை குறைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதய கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், பாக்டீரியா தொற்று போன்ற மிக முக்கிய நோய்களுக்காக மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சில மருந்துகளை, தேசிய அளவிலான அத்தியாவசிய மருந்துகளாக மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள மருந்துகளின் விலையை, என்.பி.பி.ஏ., எனப்படும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் கட்டுப்படுத்தி கண்காணித்து வருகிறது.

இந்த பட்டியலில் இல்லாத மேலும் சில அத்தியாவசிய விலை உயர்ந்த மருந்துகளை இந்த பட்டியலில் சேர்க்கவும், அதன் விலையை குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு அதிகம் பரிந்துரைக்கப்படும், ‘சிடாகிளிப்டின்’ மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு பயன்படுத்தப்படும், ‘மெரோபெனம்’ போன்ற விலை உயர்ந்த மருந்துகளின் விலையை குறைக்கும் நடவடிக்கை துவங்கப் பட்டுள்ளது.

மேலும், தற்போது மருந்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படாத மருந்துகள் தேசிய அளவிலான அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இருந்தால், அவற்றை நீக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.