மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து சபரிமலை நடை நாளை அடைப்பு…!

Scroll Down To Discover
Spread the love

சபரிமலையில் டிசம்பர்., 30-ல் தொடங்கிய மகரஜோதி கால பூஜைகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

ஜனவரி.,14ல் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. அதன் பின்னர் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் இருந்து தினமும் இரவு 9:00 மணிக்கு 18-ம் படிக்கு முன் சுவாமி எழுந்தருளினார். நேற்று சரங்குத்திக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று காலை 10:30 மணியுடன் நெய்யபிேஷகம் நிறைவு பெற்றது. இன்று காலை முதல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டாலும் நெய்யபிேஷகம் கிடையாது. இரவு 9:00 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதி பூஜை நடைபெறும். இதன் பின்னர் நடை அடைக்கப்படும்

நாளை காலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் பந்தளம் மன்னர் பிரதிநிதி சங்கர்வர்மா சன்னதி முன்பு வந்து தரிசனம் நடத்துவார். அவருக்கு பிரசாதம் கொடுத்த பின்னர் மேல்சாந்தி பரமேஸ்வரம் நம்பூதிரி நடை அடைத்து அவருடன் 18-ம் படிக்கு கீழே வருவார். கோயில் சாவி மற்றும் இந்த ஆண்டுக்கான வருமானம் என்று கூறி பண முடிப்பையும் ஒப்படைப்பார். அதை பெற்றுக்கொண்ட மன்னர் பிரதிநிதி மீண்டும் அதை மேல்சாந்தியிடம் கொடுத்து வரும் நாட்களிலும் பூஜைகள் தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி திருவாபரணங்களுடன் பந்தளம் புறப்படுவார். இந்த நிகழ்வுடன் இந்தஆண்டுக்கான மகரஜோதி சீசன் நிறைவு பெறும்.