பசு நம்முடைய தாயிற்கு இணையானவள் – சத்குரு

Scroll Down To Discover
Spread the love

ஈன்றெடுத்த தாயிற்கு பிறகு நாம் பசுவின் பால் குடித்து வளர்வதால் பசு நம்முடைய தாயிற்கு இணையானவள்” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறினார்.

மேலும் மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தி: நம்மை சுற்றி பல ஜீவன்கள் இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. அதிலும் குறிப்பாக, நாம் விவசாய கலாச்சாரமாக வளர்ந்து வந்ததால் மாட்டிற்கும் நமக்கும் ஒரு ஆழமான தொடர்பு உள்ளது.

வயலில் மாடு நம்முடன் இணைந்து வேலை செய்கிறது. நாம் குடிக்கும் பாலும் அதனிடம் இருந்து தான் வருகிறது. பசு நம் தாயிற்கு பிறகு ஒரு முக்கிய உயிராக இருக்கிறாள். பசு நம் தாயிற்கு இணையானவள். அதனால் தான் மாட்டு பொங்கலை நாம் பெரிய விழாவாக கொண்டாடுகிறோம்.

பொங்கல் பண்டிகை – நாம் உருவாகக் காரணமான மண், விலங்குகள், காற்று, நீர், மக்கள் என அனைத்தையும் கொண்டாடுவதற்கான ஒரு விழா. கொண்டாடிக் களித்திடுங்கள்!இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.