ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக மேல்நடவடிக்கை எடுக்க தடை: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Scroll Down To Discover
Spread the love

சென்னை சுற்றுசூழல் அனுமதி இன்றி கட்டுமானங்கள் மேற்கொண்டதாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக மேல்நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சுற்றுசூழல் அனுமதி இன்றி கட்டுமானங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என கூறி தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இதனை எதிர்த்து ஈஷா அறக்கட்டளை வழக்கு தொடரப்பட்டது. 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பாணையின்படி, ஈஷா அறக்கட்டளை ஏற்கெனவே புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.கல்வி பயன்பாட்டு கட்டிடங்கள் என்பதால் சுற்றுசூழல் அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு பெற உரிமை உள்ளதாக ஈஷா தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளது.

ஈஷா அறக்கட்டளை தாக்கல் செய்த மனுவுக்கு, இரு வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுற்றுசூழல் அனுமதி தொடர்பான 2014 ஆம் ஆண்டு அறிவிப்பாணையை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியுமா? என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.