சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி கால வருமானம் ரூ.100 கோடியை கடந்தது..!

Scroll Down To Discover
Spread the love

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி கால பூஜைகள் தற்போது நடக்கின்றன. தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 60 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெருவழிப்பாதையில் வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மண்டல, மகரஜோதி காலத்தில் தேவசம்போர்டின் மொத்த வருமானம் 100 கோடி ரூபாயை கடந்தது. மகர ஜோதி காலத்தில் மட்டும் 17.75 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மண்டல காலத்தில் வருமானம் 84.93 கோடி ரூபாயாகும். நாணயங்கள் இன்னும் எண்ண வேண்டியுள்ளதால் வருமானம் மேலும் அதிகரிக்கும். கூட்டத்தை சமாளிக்க மூன்று அரவணை கவுன்டர்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் இடப்பற்றாக்குறை காரணமாக ஒன்று மட்டுமே திறக்கப்பட்டது.

பம்பையில் கேரள அரசு போக்குவரத்துக்கழகத்தின் ஸ்பெஷல் சர்வீஸ் மூலம் 15 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மகரஜோதிக்கு முன்னோடியாக 11ம் தேதி நடைபெறும் எருமேலி பேட்டை துள்ளலுக்கு அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்கள் தயாராகி வருகின்றனர். இந்த குழுவினர் இவர்களின் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர். 12ம் தேதி புறப்படும் திருவாபரண பவனிக்காக காட்டு பாதை தயார் செய்யப்பட்டு வருகிறது.