பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ மகா மிருத்தியுஞ்சய யாகம் செய்த அண்ணாமலை..!

Scroll Down To Discover
Spread the love

திருப்பரங்குன்றம் பகுதியில் தனியார் மஹால் ஒன்றில் பாரத பிரதமர் மோடி நீடூடி வாழ வேண்டி மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் 100 மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்து மகா மிருதயுஞ்ஜய யாகம் செய்து பிராத்தனை மேற்கொண்டனர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலத்தில் சென்றபோது பாதுகாப்பு கருதி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது., தொடர்ந்து அந்தசம்பவத்தின் அடிப்படையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் வாழ மதுரை மாவட்ட பாஜக சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே உள்ள தனியார் மஹால் ஒன்றில் மகாமிருத்யுஞ்ஜய யாகம் ஐயர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
https://twitter.com/annamalai_k/status/1479362474428153857?s=20
நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மதுரை மாவட்ட செயலாளர்கள் சார்பின் மோடி அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும்., நிரந்தர பிரதமராக இருக்க வேண்டி மகா மிருத்யுஞ்ஜய யாகத்தில் கலந்துகொண்டு பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.