ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு போலீசில் சிக்கிய ரவுடி பேபி சூர்யா – குண்டர் சட்டம் பாய உள்ளதாக தகவல்…?

Scroll Down To Discover
Spread the love

ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட, ‘ரவுடி பேபி’ சூர்யா, சிக்கந்தர் ஷா ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மதுரை, திருநகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி, 33. திருப்பூரில் வசிக்கும் இவர், ‘ரவுடி பேபி’ சூர்யா என்ற பெயரில் நடத்தும், ‘யுடியூப்’ சேனலில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்தார். வேண்டாதவர்களை தாறுமாறாக திட்டியும், ஆபாசமாக பேசியும் வீடியோ வெளியிடுவதுடன், ‘போலீசில் புகார் கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாது’ என்று வசனம் பேசுவதும் இவருக்கு வாடிக்கை.
இவரது நண்பரான சிக்கந்தர்ஷாவும், இதேபோன்ற செயலில் ஈடுபட்டு வந்தார்.

இவர்களால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரை விசாரித்த சைபர் கிரைம் போலீசார், மதுரையில் இருந்த இருவரையும் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூர்யா, சிக்கந்தர்ஷா இருவர் மீதும் தமிழகம் முழுதும் புகார்கள் இருப்பதாக, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கனவே சரவுடிபேபி சூர்யா மீது ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யூடியூப் சேனலில் ஆபாசமாக ரவுடி பேபி சூர்யா வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.