ககன்யான் திட்டத்தை தொடர்ந்து வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்ய திட்டம்….!

Scroll Down To Discover
Spread the love

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை தொடர்ந்து வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்யவும் திட்டம் இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் விடுத்துள்ள 2022 ஆம் ஆண்டிற்கான தனது புத்தாண்டு அறிக்கையில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை தொடர்ந்து வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்யவும் திட்டம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ககன்யான் திட்டத்தின் முதல்படியாக நடப்பாண்டு முதல் ஆளில்லா பயண திட்டத்தை தொடங்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வரும் சுதந்திர தினத்திற்குள் ககன்யான் திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக விகாஸ் இன்ஜின், கிரியோஜெனிக் ஸ்டேஜ், க்ரூ எஸ்கேப் சிஸ்டம் போன்றவற்றை சோதனை செய்யும் பணியில் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ககன்யான் திட்டத்திற்கான பொதுவான விண்வெளி பயிற்சியை ரஸ்யாவில் இந்திய வீரர்கள் முடித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள சிவன், சூரியனுக்கான இந்திய விண்கலமான ஆதித்யா எல் 1 இன் முதற்கட்ட சோதனை முடிந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதில் வீனஸ் மிஷன், டிஷா-இரட்டை ஏரோனமி செயற்கைக்கோள் மிஷன் மற்றும் டிரிஷ்னா, இஸ்ரோ-சிஎன்இஎஸ் ஆகியவை அடங்கும்.