பஞ்சாப் அரசு வாக்குறுதியை நிறைவேற்ற தவறி விட்டது – சர்வதேச போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற செஸ் வீராங்கனை குமுறல்!!

Scroll Down To Discover
Spread the love

பஞ்சாப் மாநில அரசு வாக்குறுதி அளித்தபடி வேலைவாய்ப்பும் பண பரிசும் தரப்படவில்லை என்று சர்வதேச அளவில் முன்னணி மாற்றுத்திறனாளி வீராங்கனையாக திகழும் மாலிகா ஹண்டா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், தனக்கு பண பரிசும் வேலை வாய்ப்பும் அளிக்கப்படும் என்று மாநில முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் அறிவித்ததாகவும் இது தொடர்பாக தமக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/MalikaHanda/status/1477545043808321538?s=20
எனினும் கொரோனா பரவல் காரணமாக சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ள மாலிகா, கடந்த டிசம்பர் 31ம் தேதி தற்போதைய விளையாட்டு அமைச்சர் பார்கட் சிங்கை சந்தித்து இது பற்றி கேட்ட போது, அதனை மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். விளையாட்டில் காது கேட்காத மாற்றுத் திறனாளிகளுக்கு வேலையோ பண பரிசுகளோ வழங்குவது குறித்து அரசிடம் கொள்கை முடிவு ஏதும் இல்லை என்று அமைச்சர் பதில் அளித்ததாக தெரிவித்துள்ளார்.சர்வதேச அளவில் சாதித்த மாலிகா ஹண்டாவிற்கு உரிய அங்கீகாரத்தையும் ஏற்கனவே அறிவித்தபடி வேலை வாய்ப்பு மற்றும் பரிசையும் வழங்குமாறும் நெட்டிசன்கள் வலியுறுத்தி உள்ளனர்.