முன்பதிவு தொடங்கியது – 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி.!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது . 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2வது டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி போடுவதற்கு ஜனவரி 3 முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. கோவின் இணையதளத்தில் ஆதார் ,பள்ளி அடையாள அட்டை, மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதையடுத்து கோவின் இணையதளத்தில் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்த விண்ணப்பித்து வருகின்றனர்