வலிமைங்கிறது அடுத்தவன காப்பாத்த தான் அழிக்க இல்ல! – வெளியானது ’வலிமை’ டிரெய்லர்..!

Scroll Down To Discover
Spread the love

நடிகர் அஜத்குமாரின் வலிமை திரைப்படத்திற்கு மிக நீண்டநாட்களாகவே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் அஜித்தின் ’வலிமை’ திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கான அப்டேட்டுகளை கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் கேட்டு, உலகளவில் டிரெண்ட் செய்தனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முதல் கால்பந்து மைதானம் வரை என வலிமை அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் அதகளப்படுத்தினர்.

அரசியல் தலைவர்களைக்கூட விட்டுவைக்காமல் அவர்களிடமும் வலிமை அப்டேட்டை கேட்டு வந்தனர். இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடந்த சில நாட்களாகவே வலிமை படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிந்த வண்ணம் இருந்தது. பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ள நிலையில், இன்று மாலை வலிமை படத்தின் டிரெய்லர் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார்.
https://twitter.com/BoneyKapoor/status/1476538940144291842?s=20
அதன்படி, மாலை 6.30 மணிக்கு வலிமை படத்தின் டிரெய்லர் வெளியானது. யுவன் சங்கர் ராஜாவின் மிரட்டும் இசையில், டிரெய்லரின் தொடக்கமே பைக்ரேஸ் காட்சிகள் மிரட்டுகின்றன. போலீஸ் அதிகாரியாக வருகிறார் நடிகர் அஜித். ‘வலிமை என்பது அடுத்தவனை காப்பாத்துவதற்கு தான், அடுத்தவன அழிக்க இல்ல’ என அவர் பேசும் வசனம், ரசிகர்களை புல்லரிக்க வைத்துள்ளது. ,
இதனால், வலிமை திரைப்படத்தின் டிரெய்லரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.