கேரளா ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை வழக்கு : மேலும் ஒருவர் கைது..!

Scroll Down To Discover
Spread the love

கேரளாவில் மனைவி கண் எதிரே கொல்லப்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர் சஞ்சித் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரது பெயர் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எலப்புள்ளியை சேர்ந்தவர் சஞ்சித். ஆர்எஸ்எஸ் பிரமுகரான இவரை கடந்த நவ., 15 ல் ஐந்து பேர் கும்பல் மனைவி கண் எதிரே வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குற்றவாளிகைள பிடிப்பதில் மாநில அரசு சுணக்கம் காட்டுவதாகவும், நேர்மையான விசாரணை கோரியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜகவினர் கடிதம் எழுதினர். இதனை தொடர்ந்து மாநில போலீசார் தீவிரமாக விசாரிக்க துவங்கியதில் துப்பு துலங்கியது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய அப்து சலாம் 30, பாசில் நிஷாத் 37, நசீர் 31, ஷாஜகான் 37, ஆகியோரை கைது செய்தனர்.
குற்றவாளிகளுக்கு உதவியளித்த முகமது ஹாரூண், நவ்பல், இப்ராஹிம், சம்சீர் ஆகியோருக்காக “லுக் அவுட் நோட்டீஸ்” போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், மேலும் ஒருவரை போலீசார் செர்புளச்சேரியில் கைது செய்துள்ளனர். பாலக்காடு எஸ்.பி., விஸ்வநாதன் கூறுகையில், ”அடையாள அணிவகுப்பும் சாட்சிகளிடம் வாக்குமூலம் போன்ற தொடர் நடவடிக்கைகள் உள்ளதால் கைதானவரின் பெயர், முகவரி வெளியிடவில்லை,” என்றார்.