கோவில் நிதியை சட்டவிரோதமாக எடுத்து மீன்மார்க்கெட் கட்ட எடுப்பதா.? ஹெச். ராஜா கண்டனம்..!

Scroll Down To Discover
Spread the love

சென்னை குயப்பேட்டை கந்தசாமி ஆதி மொட்டையம்மன் கோயில் இடத்தில் மீன்மார்க்கெட் கட்டுவதற்காக கோயில்களின் நிதி ரூ.1.55 கோடியை எடுத்தது கண்டிக்கத்தக்கது. கோயில்களில் உபரி நிதி இருந்தால் அதை கட்டாயம் வருமானம் இல்லாத கோயில்களுக்கு தான் பயன்படுத்த வேண்டும்,” என சிவகங்கையில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
https://twitter.com/HRajaBJP/status/1475810769564364801?s=20
அவர் கூறியதாவது: ஜன.,3ல் சிவகங்கையில் நடக்கும் வேலுநாச்சியார் பிறந்த நாள் விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்கிறார். திருச்செந்துார் கோயிலில் பெண் பக்தரை தாக்கிய அறநிலையத்துறை உதவி கமிஷனரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

சென்னை குயப்பேட்டை கந்தசாமி ஆதி மொட்டையம்மன் கோயில் இடத்தில் மீன் மார்க்கெட் கட்டுவதற்காக, திருத்தணி சுப்பிரமணியசுவாமி, திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி, வைகுண்ட பெருமாள் கோயில்களின் நிதி ரூ.1.55 கோடியை எடுத்தது கண்டிக்கத்தக்கது. கோயில்களில் உபரி நிதி இருந்தால் அதை கட்டாயம் வருமானம் இல்லாத கோயில்களுக்கு தான் பயன்படுத்த வேண்டும்.

பதவிக்காக ஜெ., காலில் விழுந்த சேகர்பாபு தான் அறநிலையத்துறை அமைச்சராக உள்ளார். ஹிந்து கோயில்கள் விஷயத்தில் அமைச்சர் சேகர்பாபு எல்லை மீறக்கூடாது. காங்., – திமுக கூட்டணி ஆட்சியில் தான் 650 மீனவர்கள் கொல்லப்பட்டனர். நுாற்றுக்கணக்கான படகுகள் சேதமாகின. பாஜக., ஆட்சியில் மீனவர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் என்றார்.