பாகிஸ்தான் சிறையில், 29 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விடுதலையான இந்தியர்…!

Scroll Down To Discover
Spread the love

பாகிஸ்தான் சிறையில் 29 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விடுதலை செய்யப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த குல்தீப் சிங் நேற்று சொந்த கிராமத்திற்கு வந்தார்.

ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டம் மெக்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் குல்தீபர்சிங், 53 1992-ம் ஆண்டு டிசம்பரில் ஜம்மு-காஷ்மீரின் இந்தியா- பாக். எல்லை கட்டுப்பாடு கோட்டின் சர்வதேச எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக பாக். ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

உளவு பார்த்ததாக குல்தீப் சிங் மீது வழக்குப்பதியப்பட்டு லாகூரில் உள்ள கோட் லக்பாத் சிறையில் அடைக்கப்பட்டார். 29 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார். நேற்று சொந்த கிராமத்திற்கு வந்த குல்தீப்சிங்கை குடும்பத்தினர் வரவேற்றனர்.
https://twitter.com/ANI/status/1475545249288052738?s=20
இது குறித்து குல்தீப் சிங் கூறுகையில்:- உளவு பார்த்ததாக 1992-ம் ஆண்டு என்னை பாக்.ராணுவம் கைது செய்தது . சிறையில் மூன்று ஆண்டுகள் என்னை சித்ரவதை செய்தனர். 25 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்ததன் அடிப்படையில் என்னை விடுதலை செய்தனர். உயிருடன் சொந்த நாட்டிற்கு செல்வேன் என நினைத்து கூட பார்த்ததில்லை. மறுபிறவி எடுத்து வந்துள்ளேன் என்றார்.

TAG: Pakistani jail | Indian man | spending 29 years | Jammu and Kashmir | Kuldeep Singh