மீண்டும் கோயில் ஊழியரை தாக்கிய யானை..!

Scroll Down To Discover
Spread the love

திருச்சி வன உயிரியல் பூங்கா சென்று வந்த திருப்பரங்குன்றம் தெய்வானை யானை மீண்டும் கோயில் ஊழியரை தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாம்.

திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானை பேரிச்சம்பழம் கொடுப்பதற்காக புகழேந்தி சென்றுள்ளார். அப்பொழுது, துதிக்கையால் தாக்கி கோவில் பேஸ்கார் புகழேந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு கடந்த 2014-ம் ஆண்டு 7 வயது நிரம்பிய நிலையில் இந்த யானை வாங்கப்பட்டது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து வாங்கி வரப்பட்ட இந்த யானை, சில சமயங்களில் கோபத்துடன் நடந்து கொள்வது வாடிக்கை. முதலாவதாக பாகன் கணபதி முருகனை தாக்கியது. அதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அடு்த்த சில நாட்களில் மற்றொரு பாகனான கனகசுந்தரம், உதவியாளர் சிதம்பரம் ஆகியோரை அடுத்தடுத்து தாக்கியது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 24-ந் தேதி, காளீஸ்வரன் (30) என்பவரை தாக்கி கொன்றது. பின்னர் கடந்த ஆண்டில் ஜூன் மாதம் திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் உள்ள மறுவாழ்வு முகாமில் இருந்த போது பாகன் கரண் என்பவரை தாக்கியது. புத்துணர்வு முகாமில் இருந்து வந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பராமரிக்கப்பட்டது. பின்னர், 11 மாதத்திற்கு பிறகு மீண்டும் கடந்த 6-ந் தேதிதான் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு இந்த யானை அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று கோவில் ஊழியர் புகழேந்தியை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி : Madurai -RaviChandran