எதிரிகளின் வான் இலக்கை துல்லியமாக தாக்கும் அப்யாஸ் ஏவுகணை : வெற்றிகரமாக சோதித்த இந்தியா..!

Scroll Down To Discover
Spread the love

ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் இருந்து அப்யாஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த அப்யாஸ் ஏவுகணை காண்பதற்கு சிறிய ரக விமானம்போல இருக்கிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அப்யாஸ் ஏவுகணை எதிரிகளின் வான் இலக்கை துல்லியமாக தாக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.


இதன் திறனை சோதிப்பதற்காக ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள கடல் பகுதியில் இருந்து ஏவப்பட்டது.மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்த அப்யாஸ், வானில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.