கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பாலம் அருகே உள்ள செல்வராஜ கணபதி கோயிலை அகற்ற வேண்டும் என்று பொதுப்பணித்துறை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இதற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இரணியல் வள்ளியாறு பாலம் அருகே பல ஆண்டுகளாக செல்வராஜ கணபதி கோயில் உள்ளது. 21 நாட்களுக்குள் இந்த கோயில் ஆக்ரமிப்பை அகற்ற வேண்டும். தவறினால் தக்கலை நீர் பாசன சிறப்பு பிரிவு உதவி பொறியாளர் ஆக்ரமிப்பை அகற்றிவிட்டு, அதற்கான செலவு தொகையை தங்கள் மீது விதிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை உதவி பொறியாளரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 30ம் தேதி இது தொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான காலக்கெடு முடிந்துள்ளது.இருப்பினும் கோயில் அகற்றப்படாத நிலையில் கோயிலை அகற்ற பொதுப்பணித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து பத்மநாபபுரம் சப்.கலெக்டர் அலர்மேல் மங்கை மற்றும் கல்குளம் தாசில்தார் உள்ளிட்டோரும் நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது பொதுமக்கள் கோயில் அமைந்திருக்கும் பகுதி தண்ணீர் போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எந்த இடையூறும் இல்லாத வகையில் அமைந்துள்ளது. தடுப்பணை அருகே தான் கோயிலும் அமைந்துள்ளது. பல 100 வருடங்களாக இங்கு பூஜைகள் நடைபெறுகிறது, அனைத்து சாதி சமூகத்தவர்களும் ஒருமைப்பாட்டுடன் நடக்கிறார்கள்எனவே இந்த கோயிலை எக்காரணம் கொண்டும் இடிக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.
இந்நிலையில் பொதுப்பணித்துறை உத்தரவு கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செல்வராஜ கணபதி கோயில் முன்னிலையில் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது
அப்போது பேசிய அவர்:- இந்துக்கள் கன்னியாகுமரியில் சிறுபான்மையினராக பார்க்கப்படுகின்றனர் முக்கிய அரசு பொறுப்புகள் கிறிஸ்தவர்கள் வசம் உள்ளது. அவர்கள் குமரி இந்துக்களை ஒடுக்க பார்க்கின்றனர். இரணியல் வள்ளி ஆற்றின் கரையிலுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வராஜ கணபதி திருக்கோவில் இடிப்பு விவகாரம் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு முடிக்க விரும்புகின்றேன். அவ்வாறு மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாவிட்டால் தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டமாக நடத்தி இந்துக்களின் உரிமையை மீட்டுத் தருவேன்.

மேலும் திமுக ஆட்சிக்கு வந்து 200 நாட்கள் ஆன நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களை சாலை விரிவாக்கம் என்ற பெயரிலும் பொதுப்பணித்துறையின் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என கூறியும் இடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய கோயில்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு கூறினார்.
செய்தி : H-TharNash

														
														
														
Leave your comments here...