ஒமைக்ரான் தாக்கம் : தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

Scroll Down To Discover
Spread the love

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இப்போது தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் தொற்று குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பல்வேறு நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேகமாக பரவும் தன்மையை கொண்ட இந்த ஒமிக்ரானை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இந்த வகை தொற்று பரவியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தற்போது உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலை குறித்தும், கட்டுப்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பரவாத வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.