ஹெலிகாப்டர் விபத்து – ராணுவ தளபதி நரவனே விபத்துக்குள்ளான இடத்தை நாளை பார்வையிடுகிறார்..!

Scroll Down To Discover
Spread the love

நீலகிரி மாவட்டம், குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். பயணித்த 14 பேரில் 13 பேர் இறந்துவிட்ட நிலையில், ஒருவர் மட்டும் பெங்களூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை நாளை காலை ராணுவ தளபதி நரவனே பார்வையிடுகிறார். காலை 10 மணிக்கு வெலிங்டன் ராணுவ மையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர்; 12 மணிக்கு விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிடுகிறார்.