வீட்டுக் கூரைகளில் சூரிய சக்தி தகடுகள் – பொதுமக்களுக்கு செயல்படுத்த மத்திய அரசு ஆலோசனை..!

Scroll Down To Discover
Spread the love

வீட்டுக் கூரைகளில் சூரியசக்தி தகடுகளை அமைத்து, சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், தொகுப்புடன் இணைக்கப்பட்ட கூரை சூரியசக்தித் திட்டத்தை (பகுதி-2) செயல்படுத்தி வருகிறது.

மூன்று கிலோவாட் மின்சார உற்பத்திக்கு 40 சதவீத மானியமும், மூன்று கிலோ வாட்டுக்கு மேல் 10 கிலோ வாட் வரை 20 சதவீத மானியமும் அமைச்சகம் வழங்குகிறது. இத்திட்டம் மாநிலங்களில் உள்ளூர் மின் விநியோகம் நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சில நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் இத்திட்டத்தை செயல்படுத்தவதற்கு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்று கூறிவருவதாக கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்படி யாருக்கும் எந்தவித அதிகாரமும் வழங்கப்படவில்லை என்று அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

இத்திட்டம் உள்ளூர் மின்விநியோக நிறுவனங்களால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. அந்த நிறுவனங்கள் தான் கூரைகளில் தகடுகளை அமைத்து வருகின்றன. கட்டணங்களையும் அந்த நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன.

இது குறித்த தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட உள்ளூர் நிறுவனங்களை அணுகலாம் அல்லது அமைச்சகத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 1 8 0 0 – 1 8 0 3 3 3 3 தொடர்பு கொள்ளலாம்.