சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டும் : அரசியல் தலைவர்கள் கோரிக்கை.!

Scroll Down To Discover
Spread the love

சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டும் என  மும்பை வடக்கு மக்களவை தொகுதி பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி, மக்களவையில் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தாா், அப்போது பேசிய அவர்:- பெரும் புரட்சியாளா், வரலாற்று ஆய்வாளா், சமூக சீா்திருத்தவாதி, சிறந்த சிந்தனையாளா், இலக்கியவாதி மற்றும் சுதந்திரத்துக்காக போராடிய முக்கியத் தலைவா்களில் ஒருவா் என பன்முகங்களைக் கொண்ட வீர சாவா்க்கருக்கு, நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதா?’ என்று கேட்டிருந்தாா்.

இக்கேள்விக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துப்பூா்வமாக பதிலளித்தாா்:- அதில், ‘பாரத ரத்னா விருதுக்கான பரிந்துரைகள், பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைக்கப் பெற்று வருகின்றன. எனினும், இந்த விருதை வழங்குவதற்கு அதிகாரப்பூா்வ பரிந்துரை எதுவும் அரசுக்கு தேவையில்லை. ‘பாரத ரத்னா’ விருது வழங்குவது தொடா்பான முடிவுகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது