அதிகமாக தற்கொலை செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 2வது இடம் : மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தகவல்

Scroll Down To Discover
Spread the love

இந்திய அளவில் நடைபெறும் தற்கொலைகள் எண்ணிக்கை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பபட்டது. இது தொடர்பில் வெளியான பதிலில் அதிக தற்கொலைகள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கடந்த 2020 ஆம் ஆண்டில் நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை என்ன? தற்கொலைகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எதாவது மேற்கொண்டுள்ளதா?’ என மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ‘இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1,53,052 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 19, 909 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் 16,883 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் டெல்லி உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் 4,315 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்’ என தெரிவித்துள்ளது.